அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பிய ஊடகங்கள் மற்றும் திமுக 200 உபிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்புவனம் போலீசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதாவுடன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இணைந்து உள்ள புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்ற படத்தை திமுக இணைய கைகூலிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தனர்….