---Advertisement---

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்

On: September 1, 2025 11:32 AM
Follow Us:
---Advertisement---

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம்போல் வெற்றுப் பயணம்தான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று (செப்டம்பர் 01) செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்துதான் போட்டியிட்டார். இன்று வரையிலும் அவர் எங்களுடன் தான் பயணிக்கிறார். எனவே, அவர் எங்கள் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.

முதல்வர் ஸ்டாலின் பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று இருப்பதாக கூறுகிறார். இதற்கு முன்பும் அவர் அமெரிக்கா, ஐரோப்பா எனப் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.

அப்போது, அந்தப் பயணங்கள் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு, போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்.

ஆனால் அந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. இப்போதும் அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். வழக்கம் போலவே, இந்த முறையும் அவர் எந்த முதலீட்டையும் கொண்டு வராமல் சும்மாதான் திரும்பி வருவார்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்து நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment