Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல் அரசியல்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா

குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை

Posted on January 8, 2025 By admin No Comments on குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை

அண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி என, தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? என தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (ஜனவரி 08) தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை அண்ணா நகரில், சிறுமி ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போக்சோ வழக்கு தொடர்பாக, கடந்த 2024 செப்டம்பர் 7 அன்று, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், அதிகாலை வரை, அவர்களை, காவல் நிலையத்தில் வைத்திருந்து துன்புறுத்தியதாகவும், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2024 ஆகஸ்ட் 30 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியக் குற்றவாளியான சதீஷ் என்ற நபர், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் வெளியிட்ட செய்திக்கேற்ப, தாமதமாகவே செப்டம்பர் 12, 2024 அன்றுதான் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இந்த செய்திக்கு, மறுப்பு தெரிவித்த திமுக அரசு, கடந்த 13.09.2024 அன்று வெளியிட்ட செய்தி வெளியீட்டில், 14 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கியதாக வந்த செய்தி, விசாரணையில் பொய் என்று கண்டறியப்பட்டதாகவும் மறுப்பு வெளியிட்டது. இந்த மறுப்பு வெளியீட்டில், 12.09.2024 அன்று கைது செய்யப்பட்ட சதீஷ் குறித்த விவரங்கள் எதுவுமில்லை. கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணையும், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை முறையாக நடைபெறாமல், காலதாமதமாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும், விசாரணைக்கு இடையூறாக இருந்த அதிமுக நிர்வாகி ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அலட்சியமாகவும், வழக்கு விசாரணையைத் திசைதிருப்பும் போக்கிலும் செயல்பட்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் வந்த செய்தி பொய் என்று செய்தி வெளியிட்ட திமுக அரசு, தற்போது என்ன பதில் கூறப் போகிறது? வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகவியலாளர் செல்வராஜ் அவர்களைப் பாராட்டாவிடினும், அவரை மிரட்டும் விதமாக, தொந்தரவு செய்து வருவது என்ன நியாயம்? மேலும், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கவில்லை என்று விசாரணை நடத்தித் தெரிவித்த அதிகாரி யார்? பொய் கூறிய அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்த வழக்கிலும், கடந்த 11.11.2024 அன்று திமுக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் குறித்த விவரங்களை வெளியிட்டு, பின்னர் அந்த செய்திக் குறிப்பை நீக்கியது. அண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி என, தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி
Next Post: மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை

Related Posts

  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் பெரியகருப்பன் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா? தலைவர் அண்ணாமலை கேள்வி அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme