---Advertisement---

டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி

On: January 22, 2025 5:22 PM
Follow Us:
---Advertisement---

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது எனவும் அது தொடர்பாக விரைவில் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரும் என டெல்லியில் மத்திய அமைச்சர் கிசன் ரெட்டியை, விவசாய பிதிநிதிகளுடன் சந்தித்த பின்னர் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது; இன்றைய தினம், புதுடெல்லியில், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிசன்ரெட்டி அவர்களை, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசினோம்.

மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் அவர்கள் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எப்போதும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் நலனுக்காகத் துணை நிற்பார் என்று நமது விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

மேலும், மேலூர் தொகுதி விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிசன்ரெட்டி அவர்கள் உறுதி  அளித்துள்ளார். இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment