சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான அண்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும்…