---Advertisement---

தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை

On: September 11, 2025 8:12 AM
Follow Us:
---Advertisement---

பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் (செப்டம்பர் 11) தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, சிறை சென்ற தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, இன்று பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.

அப்போது மாநில பொதுச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன் பாலகணபதி அவர்களும், மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களும், திருச்சி மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்டத்தை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பாஜக காரியகர்த்தாக்களும் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment