தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி (மே 04) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


