மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
மக்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு, நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம், வலிமையான பாரதத்தை கட்டமைக்கும் பெரும் பணியில் பங்கேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் யோகா பயிற்சி செய்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியதாவது: சர்வதேச யோகா தினமான இன்று, திருநெல்வேலியில் யோகா பயிற்சி…