---Advertisement---

ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குங்கள்: வாக்காளர்களுக்கு தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள்

On: April 22, 2026 12:49 PM
Follow Us:
---Advertisement---

தமிழகத்தில் முன்னேற்றத்திற்காக அதிகளவில் வாக்களித்து, ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என வாக்காளர்களுக்கு தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய தலைவர் நிதின் நபின் (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வைக்கு மாநிலம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவது தெள்ளத் தெளிவாகிறது.

திமுக அரசு மக்கள் நலனை விட தனது குடும்ப நலனையே முன்னிலைப்படுத்தியுள்ளது. மேலும், நமது சனாதன தர்மத்தையும், பண்பாட்டையும் வெளிப்படையாக அவமதித்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அவமதித்த இவர்களின் அகந்தையை, இனி தமிழக மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். வாரிசு அரசியலுக்கு பதிலாக செயல்திறன் மிக்க ஆட்சியை முன்னிலைப்படுத்தும் எதிர்காலத்தை நோக்கியே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் வளர்ச்சியை வழங்கும் ‘டபுள் இன்ஜின்’ அரசைத் தமிழக மக்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர்.

நமது கட்சிப் பணியாளர்களின் கடின உழைப்பிற்கும், தமிழக மக்களின் அன்பிற்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் முன்னேற்றத்திற்காக அதிகளவில் வாக்களித்து, ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தேசிய தலைவர் நிதின் நபின் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment