பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து சட்டமன்ற வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக பாஜகவின் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் (பிப்ரவரி 09) நடைபெற்றது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (பிப்ரவரி 09) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அவர்கள் தலைமையில் நம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து சட்டமன்ற வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக பாஜகவின் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய செயலாளர் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர். இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.









