ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை
ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள் என்று கோவை மாவட்ட பாஜக புதிய அலுவலக திறப்பு விழாவில் தலைவர் அண்ணாமலை பேசினார். கோவை மாவட்ட பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை உரையாற்றியதாவது: நமது புதிய இல்லம், நமது கோவிலை திறப்பதற்காக வந்திருக்கக்கூடிய நமது அன்பை எல்லாம் பெற்றிருக்கக்கூடிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, மேடையில் இருக்கக்கூடிய எல்லாத்தலைவர்களும், மத்திய இணையமைச்சர்…