வீரத்தின் வடிவமாகத் திகழ்ந்து, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இறுதி மூச்சுவரை அசைக்க முடியாத உறுதியுடன் போராடிய மாவீரர் தீரன் சின்னமலை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (ஏப்ரல் 17) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில்;
வீரத்தின் வடிவமாகத் திகழ்ந்து, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இறுதி மூச்சுவரை அசைக்க முடியாத உறுதியுடன் போராடிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளை இன்று மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.
ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த மூன்று முக்கியப் போர்களில் அபாரமான வீரத்தால் மாபெரும் வெற்றிகளைப் பெற்றதுடன், மக்களின் நலனுக்காக பல ஆலய திருப்பணிகளையும் மேற்கொண்டு தன்னலமற்ற சேவையைச் செய்தார்.
தேசத்தின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே தியாகம் செய்து, வீரமும் தியாகமும் என்றென்றும் நிலைக்கும் உதாரணமாக விளங்கும் அவர் புகழை நெஞ்சாரப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.



