---Advertisement---

கண் திருஷ்டியை போக்கும் வகையில் திமுக எம்.பி.,க்கள் கருப்பு சட்டை: பிரதமர் மோடி

On: April 17, 2026 1:21 PM
Follow Us:
---Advertisement---

மகளிர் மசோதாக்கள் மீதான கண் திருஷ்டியை போக்கும் வகையில் எதிர்க்கட்சி (திமுக) எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் மக்களவைக்கு (ஏப்ரல் 16) கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: நல்ல விஷயங்கள் நடக்கும் போது தீய சக்திகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கண் திருஷ்டிக்காக கருப்பு பொட்டு வைப்பது வழக்கம். தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நல்ல நேரத்தில் மசோதாக்கள் மீதான கண் திருஷ்டியை போக்கும் வகையில் எதிர்க்கட்சி (திமுக) எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment