2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை
2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை இன்று (ஜனவரி 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே, கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையுமே அழித்துவிட்டுத்தான்…