---Advertisement---

விஜய் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி மனு ; விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவு

On: May 7, 2026 4:31 PM
Follow Us:
---Advertisement---

தவெக தலைவர் விஜயிடம் நடந்த வருமான வரி சோதனை ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை பட்டியலிடுமாறு பதிவு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுங்கையூரை சேர்ந்த ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2015,16 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று கண்டறிந்து அதற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.

எனவே, வருமான வரித்துறை சோதனைகளின் போது பெறப்பட்ட ஆவணங்கள், விஜய்யின் வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்யவும், வருமான வரிச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணங்களை பயன்படுத்துதல் மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளுக்காக விஜய் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும் வகையில் அமலாக்கத்துறைக்கு ஆவணங்களை அனுப்புமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்வதற்காக மனுவை விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment