வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (ஜனவரி 18) வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு இன்று ஒரு வரலாற்று சிறப்பு…