நாகர்கோயிலில் நடைபெற்ற சாலைப் பேரணி பிரமாண்டமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகரித்து வரும் வலுவான ஆதரவை இது பிரதிபலித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
நாகர்கோயிலில் இன்று நடைபெற்ற சாலைப் பேரணி உண்மையிலேயே பிரம்மாண்டமாக அமைந்தது. தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகரித்து வரும் வலுவான ஆதரவை இது பிரதிபலித்தது.

வயது வித்தியாசமின்றி பெருந்திரளான மக்கள் கூடியிருந்ததுடன் பேரணியின் வழி நெடுகிலும் மிகுந்த உற்சாகமும் எழுச்சியும் காணப்பட்டது. குறிப்பாக, இளைஞர்களும், பெண்களும் எங்களுக்கு ஆசி வழங்க வந்திருந்தது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் இத்தகைய பெருந்திரளான பங்கேற்பு வளர்ச்சி மற்றும் சிறந்த ஆட்சிக்கான விருப்பம் தமிழ்நாடு முழுவதும் வலுவாக இருப்பதை தெளிவாக உணர்த்துகிறது.
திமுக அரசின் செயல்பாடு குறித்து கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளுக்கும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கும் இடையிலான வித்தியாசம் வெளிப்படையாகத் தெரிவதுடன், முறைகேடான ஆட்சி, போதிய பொறுப்பின்மை மற்றும் எதிர்பார்த்த பலன்கள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.




