---Advertisement---

நாகர்கோவில் பேரணியில் தலைவர்களுக்கு பிரதமர் மரியாதை

On: April 16, 2026 12:51 PM
Follow Us:
---Advertisement---

நாகர்கோவிலில் (ஏப்ரல் 15) நடைபெற்ற சாலைப்பேரணியின்போது தலைவர்கள் திருவுருவப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் சாலைப்பேரணியை நடத்தினார்.

இப்பேரணியில் வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, காமராசர், டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

நாகர்கோயிலில் நேற்று நடைபெற்ற சாலைப் பேரணியின்போது திரு கு. காமராசர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், திரு சி.என். அண்ணாதுரை மற்றும் திரு எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினேன். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment