---Advertisement---

கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம்

On: March 1, 2025 4:42 PM
Follow Us:
---Advertisement---

பிரதமரின் உருவப்படத்தை எரித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், திமுகவின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப் படத்தை எரித்தது. மூன்று நாட்கள் ஆகியும், திமுக அரசின் காவல்துறை, இந்த தேசவிரோதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.

இன்றைய தினம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரதப் பிரதமரின் உருவப் படத்தை எரித்தவர்களைக் கைது செய்யாமல், நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜகவினரைக் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள பாஜகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

और पढ़ें

பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்

திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு

2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்

விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

Leave a Comment