---Advertisement---

ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

On: February 7, 2025 4:54 PM
Follow Us:
---Advertisement---

திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை காக்க நோட்டீஸ் வழங்கிய விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி பிரபாகரனை திராவிட மாடல் அரசு கைது செய்தது. அவர் இன்று காலை ஜாமினில் விடுதலையான நிலையில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீ கந்தர் மலையை காக்க வாருங்கள் என கடந்த பிப்ரவரி 02 அன்று திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள இந்துக்களிடையே பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன் நோட்டீஸ் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். இதனை பொறுக்க முடியாத இந்து விரோத திமுக அரசு பொதுமக்களிடையே மத நல்லிணக்கத்திற்கு பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி பிரபாகரன் மீது பொய் வழக்கு பதிவு செய்து விருதுநகர் சிறையில் அடைத்தது.

இந்தநிலையில், பிரபாகரன் அவர்களுக்கு வழக்கறிஞர் பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையிலான வழக்கறிஞர் குழு நேற்று நீதிமன்றத்தில் ஜாமின் பெறப்பட்ட நிலையில் இன்று (பிப்ரவரி 07) காலை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை விருதுநகர் பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரை ராஜா தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகரத் தலைவர் ஜெய்கணேஷ், ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனியசாமி, விவசாய அணி நிர்வாகி விக்ரமாதித்தன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மதமாற்றம் செய்வதற்காக கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்கள் நடைபெறுகிறது. அதனை அப்பகுதி இந்துக்கள் கண்டறிந்து காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். ஆனால் மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷனரிகள் மீது திராவிட மாடல் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.

ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் குடியிருக்கும் ஸ்ரீ கந்தர் மலையின் புனிதத்தை இஸ்லாமிய ஜிகாதிகள் கெடுத்து வருவதை தடுப்பதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள் என நோட்டீஸ் வழங்கும் பாஜக நிர்வாகியை மட்டும் இந்த திராவிட மாடல் அரசு கைது செய்கிறது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment