மேற்கு வங்கத்தில் 15 ஆண்டு கால மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக பாஜக அரியணை ஏறியது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக்கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக அறுதி பெரும்பான்மையுடன் அங்கு முதல் முறையாக ஆட்சியை பிடித்தது.
இதை தொடர்ந்து பாஜக தலைமையில் அங்கு ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சுவேந்து அதிகாரியை சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆட்சி அமைக்க பாஜக மூத்த தலைவர்கள் ஆதரவு கடிதத்தை வழங்கிய நிலையில் இன்று (மே 09) சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கு வங்க முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். அவர் திறந்த வாகனத்தில் பொதுமக்களை பார்த்து கையசைத்துபடி சென்றார். வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று (மே 09) புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் கிரவுன்ஸில் நடந்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மூத்த பாஜக தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
யார் இந்த சுவேந்து அதிகாரி?
ஒரு காலத்தில் மம்தாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த சுவேந்து அதிகாரி அக்கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 2020 டிசம்பரில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2021 தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி தேசிய அரசியலை அதிர வைத்தார்.
தற்போது 2026 சட்ட சபை தேர்தலில், மம்தாவின் கோட்டையாக கருதப்படும் பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தாவை தோற்கடித்து, பாஜகவின் அமோக வெற்றிக்கு வித்திட்டார்.
கடந்த 15 ஆண்டுகாலமாக காட்டாட்சி நடத்தி வந்த மம்தா பானர்ஜியின் ஆட்சியில் பங்களாதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமிய ஜிகாதிகள் மேற்கு வங்கத்தில் ஊடுருவி வந்தனர். இந்த ஊடுருவல்காரர்களை வைத்துக்கொண்டு பல்வேறு தேர்தல்களில் மம்தா வெற்றி பெற்று வந்தார். மேலும் தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஜிகாதிகள் கூட்டம் இருந்தது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்த பிரச்சார கூட்டங்களில் பேசும்போது மே 4ஆம் தேதிக்குள் ஊடுருவக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் இல்லை என்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைவரையும் விரட்டி அடிப்போம் என்ற முழக்கங்களை முன்வைத்தனர். அதன்படி பாஜக ஆட்சி வந்து விடும் என்ற அச்சத்தில் பல ஜிகாதிகள் தேர்தலுக்கு முன்பே நாட்டை விட்டு ஓடத்துவங்கினர். விரைவில் மீதம் இருப்பவர்களையும் புதிதாக பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி விரட்டி அடிப்பார் என்பது உறுதி.



