தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பிரச்சினை ஏற்படுத்துமாறு திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெறும் சூழலில், வாக்கு எண்ணிக்கையை தற்காலிகமாக நிறுத்தும் வகையில் செயல்படுமாறு திமுக சார்பில் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போதைய அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி நிலை ஏற்பட்டால், மறுஎண்ணிக்கை கோரிக்கையுடன் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்க முயற்சி செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சில ஆதரவு நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் திமுக 125 முதல் 145 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணித்திருந்தன. ஆனால், நடுநிலை நிறுவனங்கள் மற்றும் சில தேசிய ஊடகங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவித்ததையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் முழு கவனத்துடன் இருந்து, தேவையான சமயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோ. வினோத்ராஜா



