கொடைக்கானலில் இருந்து மதுரை வந்த மு.க.ஸ்டாலின், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை வந்ததும் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல், நேராக கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
எக்ஸிட் போல் முடிவுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பும் பின்னரும், கட்சிக்கு சாதகமாக பல கருத்துக்கணிப்புகளை நாமே நம்பிய நிறுவனங்கள் மூலம் பெற்றிருந்தோம். அவை 125 முதல் 169 இடங்கள் வரை கிடைக்கும் என கணித்தன. ஆனால், அதற்காக அதிக செலவு செய்திருந்தபோதிலும், முடிவுகள் எதிர்பார்ப்புக்கு அமைய வரவில்லை என ஸ்டாலின் கடும் கோபம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், தேர்தல் காலத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பலமுறை கூறியிருந்த நிலையிலும், தற்போது வெளியாகும் கணிப்புகள் அந்த அளவுக்கு இல்லை என்பதும் கவலைக்குரியதாக கூறப்படுகிறது. மாவட்டம் தோறும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும், அது பயனளிக்கவில்லை என்றும் அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
ஊடகங்கள் முன்பு யாரும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்ததாக தகவல். இந்த சூழ்நிலையில், அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும், கட்சி வட்டாரங்களின் தகவல்படி, சபரீசன் தலைமையில் பல்வேறு சர்வேகள் நடத்தப்பட்டும், 90 இடங்களைத் தாண்டும் நிலை காணப்படவில்லை என கூறப்படுகிறது. கூட்டணி அமைந்திருந்தபோதிலும், சில நடுநிலை ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் – குறிப்பாக டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் நியூஸ் 18 – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் எதிர்மறை கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்த நிலைமையால், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற தகவல்கள் பரவி வருவதால், திமுக மற்றும் அவர்களின் குடும்ப வட்டாரங்களில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மோ. வினோத்ராஜா




