குஜராத் உள்ளாட்சி தேர்தலில் 100% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள வார்டில் ஹிந்து வேட்பாளர் நைனேஷ்பாய் சோனி வெற்றிப்பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கோத்ரா முனிசிபாலிட்டி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அபெக்ஷாபென் நைனேஷ்பாய் சோனி போட்டியிட்டார். இவர் பெண் வேட்பாளர். அதுவும் சுயேட்சையாக போட்டியிட்டார். 7-வது வார்டில் 100 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள்தான். இருந்தபோதிலும் ஹிந்து வேட்பாளராக அபெக்ஷாபென் நைனேஷ்பாய் சோனி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு இந்த வார்டில் வாக்கு இல்லை. என்றாலும் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றதால் அங்கு நின்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.




