பிஹார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெற்றார்.
பிஹார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றத்தை அடுத்து கடந்த 15-ம் தேதி மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் சாம்ராட் சௌத்ரி. இதையடுத்து, 243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக்கொண்ட சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 24) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அரசு எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம், பிஹாரில் என்டிஏ கூட்டணியின் ஒற்றுமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





