---Advertisement---

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி

On: August 16, 2025 5:36 AM
Follow Us:
---Advertisement---

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (ஆகஸ்ட் 15) நேரில் அஞ்சலி செலுத்தினார்,

மறைந்த, நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் (ஆகஸ்ட் 15) தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: நாகாலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் அண்ணன் இல. கணேசன் அவர்களின் மறைவையொட்டி, இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

அண்ணன் இல. கணேசன் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஓம் சாந்தி! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment