---Advertisement---

முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை

On: May 27, 2025 9:02 AM
Follow Us:
---Advertisement---

முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (மே 27) சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணியில் இந்து முன்னணி மற்றும் பாஜக ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மதுரை பெருங்கோட்டம் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன்குமார், மாவட்ட பொருளாளர் எஸ்.ராக்கப்பன், மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment