மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கு நேற்று (பிப்ரவரி 04) வந்த முருக பக்தர்கள் மற்றும் பயணிகளை போலீசார் அராஜகமாக கைது செய்ய முயற்சித்தனர். இதனை ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் வீடியோவாக பதிவு செய்தார். அங்கு ஆய்வுக்காக வந்த காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளரின் செல்போனை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டார்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி நேற்று இந்து விரோத திமுக அரசின் 144 தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்துக்கள் ஒன்று திரண்டு மதுரைக்கு வரத்துவங்கினர். அதுபோன்று வருபவர்களை ரயில் நிலையத்திலேயே போலீசார் அராஜகமாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.
அதே போன்றுதான் நாகர்கோயிலில் இருந்து கோவைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று 11:40 மணியளவில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் ஏராளமான பயணிகள் மற்றும் முருக பக்தர்கள் இறங்கி செல்ல முற்பட்டனர்.
அப்போது ரயில் பயணிகளை விட அதிகளவிலான போலீசார் இரண்டு நடைமேடை பகுதிகளிலும் குவிக்கப்பட்டு வரும் பயணிகளை கைது செய்தனர். சிலர் ஏன் எங்களை கைது செய்கிறீர்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அங்கு இருந்த சில போலீசார்கள் பயணிகளிடம் அராஜகமாக நடந்துக்கொண்டனர். இதனை ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் செல்போனில் படம் எடுத்தார்.
அப்போது அங்கு ஆய்வுக்காக வந்த மதுரை காவல் ஆணையர் லோகநாதன் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதுப்பற்றிய செய்தி பொதுமக்கள் மத்தியில் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் அவர்களின் செல்போனை பிடுங்கிக்கொண்டார். அங்கு மற்ற பத்திரிகையாளர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தி சேகரிப்பது எங்கள் கடமை அதை தடுக்க போலீசாருக்கு உரிமை இல்லை என்று கூறினர். இதன் பின்னர் செல்போனை ஒப்படைத்த காவல் ஆணையர் லோகநாதன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் மட்டுமின்றி விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் போலீசார் அத்துமீறி பயணிகளை கைது செய்துள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படி மாநில காவல்துறை ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பயணிகளை கைது செய்யலாம். எனவே அத்துமீறிய காவல்துறையினர் மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.