---Advertisement---

வேட்பாளரை மாற்ற தயாராகும் விஜய்!

On: April 2, 2026 9:34 AM
Follow Us:
---Advertisement---

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் விஜய்க்கு புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், சிலர் தங்களது தொகுதிகளில் செயலில் ஈடுபடாமல் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்களை கருத்தில் கொண்டு வேட்பாளர்களை மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது, கூட்ட நெரிசலில் பெண்கள் மயக்கமடையும் சம்பவங்கள் இடம்பெறுவது போன்றவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நான்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தால் அதில் இரண்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு மற்றவற்றை தவிர்ப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு கூடுதலாக, வேட்புமனு தாக்கல் செய்யும் போது விஜய் குறிப்பிட்ட சொத்து விவரங்களில், குடும்பத்தினருக்கு கடன் வழங்கியதாக கூறியிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் மாற்றம் இருக்கக்கூடும் என பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் விஜய் சிக்கலில் உள்ளார் என்ற கருத்துகளும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.

#76th independence day #Amitsha #Annamalai #Bjp #budget 2026 #coldrif cough syrup #Congress #Dharmapuri #Diesel #Diwali #DMKFails #DMKFailsTN #donald trump #draupadi murmu #Drump #Education #elon musk #gujarat #ila ganesan #India #Indian Army #Iran #Karur #Kashi #Madurai #MetturDam #MK Stalin #nainar nagendran #NaxalFreeIndia #nirmala sitharaman #Oreynaadu #PMModi #PM Modi #president of india #RN Ravi #RSS 100 #School #sensex #Tamilnadu #UPI #vanathi srinivasan #Vande madaram #Vijay MK Stalin oreynaadu

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment