
சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான தமிழக அரசின் சார்பில் குடிநீர் ATM இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இதை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 2025-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். ஆனால், அதன் பயன்பாடு என்பது தொடக்கத்தில் இருந்தே பொதுமக்களுக்கு இன்னலாக இருந்து வந்தது.
சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சென்னை பெருநகர நீர் வழங்கல் நிர்வாகம் சார்பில் மொத்தம் 57 குடிநீர் விநியோகிக்கும் ATM-கள் நிறுவப்பட்டுள்ளன, அதுமட்டுமல்லாமல் கூடுதலாக சென்னை மாநகராட்சி 15 இயந்திரங்களை நிறுவியுள்ளது. தற்போது சென்னையிலுள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் நிலைமையை ஆய்வு செய்ததில் பல இயந்திரங்கள் பழுதாகி இருக்கிறது எனவும், மேலும் மற்றவைகளில் குறைத்தர குடிநீர் வருவதாக பலர் குற்றச்சாட்டு. சென்னையில் முக்கிய பகுதிகளில் நிறுவியுள்ள இயந்திரங்களின் நிலை என்பது மோசமாக உள்ளதாக பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றன.
மக்கள் வரிப்பணத்தில் ஒரு திட்டத்தை வெறும் விளம்பரத்திற்கு மட்டும், திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தி வந்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதுவும், சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் வழங்க கண் முன்னே இருக்கும் குடிநீர் வழங்கும் இயந்திரம் இருந்தும் ஒரு பயனும் இல்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.




