---Advertisement---

அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்த திமுக அரசு

On: December 31, 2025 6:54 AM
Follow Us:
---Advertisement---

சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க கோரி, அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை என, அடுத்தடுத்து இடங்களில் போராட்டம் நடத்திய 1,013 தூய்மை பணியாளர்களை திமுக அரசின் ஏவல்துறை கைது செய்தது.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி நிரந்தரம், மாநகராட்சியில் மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தை, நேற்று (டிசம்பர் 30) காலை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததால் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள ஸ்கீம் சாலை வழியாக திடீரென நுழைந்தனர். தவிர ஏராளமான பெண் பணியாளர்கள் அண்ணா சாலையின் நடுவே அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் முன் சக்கரத்தில், தன் தலையை வைத்து, பெண் தூய்மை பணியாளர் படுத்துவிட்டார்.

மற்றொரு பெண் திடீரென மயக்கமடையவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் மற்றொரு குழுவினர், மதியம் 2:00 மணிக்கு, மெரினா காமராஜர் சாலையில், கருணாநிதி நினைவிடத்திலும், அண்ணா சாலை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையிலும் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்செய்யவும் திணறினர்.

இரவு 10:30 மணி அளவில் ரிப்பன் மாளிகை அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர். மொத்தம் 1,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பெண் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது: இந்த வேலையை நம்பி தான் எங்களுடைய வாழ்க்கையே இருக்கிறது. இந்த வேலையும் எங்களுக்கு இல்லை என்றால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுவோம். ஐந்து மாதங்களாகப் போராடியும், யாரும் எங்கள் மீது துளியும் அக்கறை காட்டவில்லை. தமிழக முதல்வரே ஏழை, எளிய தூய்மை பணியாளர்களின் பிரச்னையை பேசி தீர்க்க முன்வாருங்கள். இவ்வாறு தூய்மை பணியாளர்கள் கூறியுள்ளனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

காசி தமிழ் சங்கமம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உன்னத இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

கும்பகோணம் தாராசுரம் கோயிலில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தரிசனம்

திமுக அரசை கண்டித்து இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன்

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

Leave a Comment