திருப்பரங்குன்றம் முருக பக்தர் பூரண சந்திரன் குடும்பத்தாரிடம் கல்வி உதவி தொகையாக முப்பதாயிரம் ரூபாயை பாஜக கல்வியாளர் பிரிவு சார்பில் இன்று (டிசம்பர் 31) வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த முருக பக்தர் பூரண சந்திரனின் கல்விச் செலவை ஏற்பதாக கடந்த (டிசம்பர் 20) அன்று பாஜக கல்வியாளர் பிரிவு சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இன்று (டிசம்பர் 31) பூரண சந்திரன் வீட்டிற்கு சென்ற பாஜக கல்வியாளர் பிரிவு மாநில அமைப்பாளர் டாக்டர் கே.ஆர்.நந்தகுமார் மற்றும் கல்வியாளர் பிரிவு நிர்வாகிகள் பூரண சந்திரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து பூரண சந்திரன் மகன்கள் இனியன், சிவனேஷ் ஆகியோரின் கல்விச்செலவிற்காக இந்துமதி பூரண சந்திரனிடம் ரூ.30,000 கல்வியாளர் பிரிவு மாநில அமைப்பாளர் டாக்டர் கே.ஆர்.நந்தகுமார் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாநில செயலாளர் டாக்டர் ஷர்மிளா ராம் ஆனந்த், மதுரை மாநகர் மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் பாலு மீனா, கிழக்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் லஷ்மணன், முனைவர். எஸ்.ஏ ராஜு. முனைவர் எஸ்.ஜெய கண்ணன், விருதுநகர் மாவட்டத் துணைத் தலைவர் எஸ். குமார். நல்லாசிரியர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இருந்தனர்.









