டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
டெல்லியில் 76-வது குடியரசு தின விழா நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக நடைபெற்றது. ஜனாதிபதி திரௌபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. பாரத நாட்டின் 76-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி பெருக்குடனும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமை பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரை படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு வந்த ஜனாதிபதி திரௌபதி…