சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் உள்ள சந்திரா அரங்கில் இன்று (நவம்பர் 04) நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனைகளை வழங்கினார்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றைய தினம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான, தமிழ்நாடு பாஜகவின் மாநில அளவிலான பூத் கமிட்டி உறுப்பினர்கள் மாநாடு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் உள்ள சந்திரா அரங்கில் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜக எப்படி எதிர்கொள்வது, பூத் கமிட்டி உறுப்பினர்கள் எப்படி தயாராவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினேன்.
அப்போது, பாஜக தேசிய துணைத் தலைவரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் பைஜெயந்த் பாண்டா, பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

