திமுக ஆட்சியில் குற்றங்கள்
திமுக ஆட்சியில் குற்றங்கள் சிபிஐ-க்கு ஒப்படைப்பார்களா? https://www.facebook.com/share/r/194XGhdnFu #oreynaadunews#OreyNaadu#newsfeed#tamilnadupolitics#TamilnaduNews#NewsUpdate#tamilreels#ADMK#DMK#BJP4IND
திமுக ஆட்சியில் குற்றங்கள் சிபிஐ-க்கு ஒப்படைப்பார்களா? https://www.facebook.com/share/r/194XGhdnFu #oreynaadunews#OreyNaadu#newsfeed#tamilnadupolitics#TamilnaduNews#NewsUpdate#tamilreels#ADMK#DMK#BJP4IND
‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் சூட்டி நம் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் அங்குள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. எல்லைக்கோட்டை தாண்டாமல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக இந்தியா…
Read More “ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: ஜனாதிபதியுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு” »
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா- பாகிஸ்தான் போரில் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று…
Read More “ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்” »
ராணி அஹல்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300-வது பிறந்தநாள் விழாவில் இன்று கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன் என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று (மே 13) ராணி அஹல்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கூறியதாவது: பாரதத்தின் தத்துவமே ஆணும் பெண்ணும் சமமென்பதுதான். கல்வி, ஆட்சி, வீரம் எல்லாவற்றிலும் ஆண்களுக்கு நிகராக அல்லது…
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கடுமையான தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாபின் சண்டீகரில் பெண்கள், இளைஞர் என பல்லாயிரம் பேர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி ஹிந்துக்கள் 26 கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியா…
Read More “இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள்” »
‘‘நாடு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருவதால், அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், விழிப்புடன் இருக்க வேண்டும்’’, என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேபினட் செயலர், பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை,…
ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி நமது இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை கூட்டி…
Read More “ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்” »
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்திய ராணுவம் பெயர் வைத்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி ஹிந்து சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம்…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது மாபெரும் தாக்குதலை இன்று நள்ளிரவு 1.44 மணிக்கு நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 ஹிந்து சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர…
Read More ““ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?” »
தமிழகத்தையே உலுக்கிய ஈரோடு இரட்டைக் கொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தம்பதியின் உறவினர்களை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மே 05) நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம். இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் இருந்த போது, மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். வீட்டினுள் இருந்த 12 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்…
Read More “ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்” »