---Advertisement---

சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம்

On: April 19, 2025 1:04 PM
Follow Us:
---Advertisement---

சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (ஏப்ரல் 19) தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரே நாடு இதழ் சந்தா சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மூன்று பேர் ஆயுள் சந்தாதாரராகவும், 6 பேர் வருட சந்தாதாரராகவும் தங்களை இணைத்துக்கொண்டனர்.

சேலம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார்.

இதற்கிடையில் திருமண மண்டப வளாகத்திற்குள் பாஜகவின் அதிகாரப்பூர்வ வார இதழான ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு இதழ் வைக்கப்பட்டிருந்தது. பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இதழ் வழங்கப்பட்டது.

மேலும், ஒரே நாடு இதழ் வருடம் முழுவதும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என கேட்ட தொண்டர்களுக்காக மேஜையில் கியூஆர் கோடு வைக்கப்பட்டிருந்தது. அதனை ஸ்கேன் செய்து வருடம் மற்றும் ஆயுள் சந்தா தாரர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர்.

அதன்படி ஜெயராமன் கல்வியாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் சேலம் மாநகரம், செந்தில் குமார் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சேலம் கிழக்கு மாவட்டம், கே.ரவீந்திரநாத் ஓசூர் தாலுகா கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய மூன்று பேர் ஆயுள் சந்தாதாரராகவும், சங்ககிரி ரமேஷ் கார்த்தி, பென்னாகரம் இளையராஜா, ராசிபுரம் சரவணன், டாக்டர் கலைச்செல்வன் இண்டூர் தருமபுரி மாவட்டம், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் வருட சந்தாதாரராகவும் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஒரே நாடு சேலம் பெருங் கோட்ட பொறுப்பாளர் பிரணவ குமார், சேலம் கோட்ட பொறுப்பாளர் பாலவிநாயகம், மாநில செய்தியாளர் வ.தங்கவேல், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சங்கீதா வி.நாயர் ஆகியோர் பங்கேற்றனர். ஆயுள் மற்றும் வருட சந்தாதாரராக தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்கு ஒரே நாடு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment