தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் மழையால் தனது வீட்டை இழந்த நிலையில் தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவியை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
இதுதொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (அக்டோபர் 10) வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில்; கடந்த வருடத்தில், பருவ மழையின் போது ஏற்பட்ட கடுமையான பாதிப்பினால் தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனது வீட்டினை இழந்திருந்தார். அப்போது அவர்களுக்கு புதிதாக வீடு கட்டித்தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டை பயனாளிக்கு வழங்கியதுடன் கோமாதாவின் அருள் கிடைக்க வாழ்த்தி பசுவும், கன்றுக்குட்டியும் புதிய இல்லத்தின் சாவியோடு சேர்த்து வழங்கி வாழ்த்தினோம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில் மக்கள் பயன்பெறும் வகையிலான ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் ஒன்றான ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ பற்றி கால்வாய் பகுதி பொதுமக்களுக்கு மேலும் தெளிவுபடுத்தப்பட்டது.
இன்று காலை, அந்த திட்டத்தில், புதிய பயனாளிகளை சேர்த்தோம். அதைத், தொடர்ந்து தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மகளிர் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினோம்.
அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா, திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் முத்து பலவேசம், மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் பிச்சையா மற்றும் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.