---Advertisement---

கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா

On: January 23, 2025 6:00 PM
Follow Us:
---Advertisement---

கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான ஹிந்து அமைப்புகள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட தர்காவில் இஸ்லாமிய ஜிகாதிகள் ஆடு, கோழிகளை வெட்டி பலி கொடுக்க முயற்சித்தனர். இந்த நிகழ்வுக்கு பாஜக உட்பட ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தலைமையிலான இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகளை சேர்ந்த சிலர், திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது அமர்ந்து பிரியாணி உண்டனர். இது ஹிந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஏறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினர், காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பாஜக தொண்டர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும்.

திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பது ஸ்ரீகந்தர் மலைதான் சிக்கந்தர் மலை அல்ல!

இன்று ஸ்ரீகந்தர் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மத மோதலை தூண்ட முயற்சிப்பதை வாக்கு வங்கி அரசியலுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

இவர்கள் விளையாடுவது ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமல்ல இறைவன் முருகனுக்கும் எதிராகத்தான்.

உத்தர பிரதேசத்தில் அயோத்தி, காசி, மதுரா போல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் வழிபாட்டுத்தலமாக மாறும்.
இந்து விரோத திராவிட மாடலுக்கு இறுதி அத்தியாயம் எழுதும் இடமாக திருப்பரங்குன்றம் மாறும்.

திருப்பரங்குன்றத்தில் இருந்து தமிழகத்திற்கு விடியல் தொடங்கட்டும்.

முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் 2026 ல் நடந்தே தீரும். ஒன்றுபட்டு வெல்லட்டும் ஹிந்து சக்தி! வீழட்டும் ஹிந்து விரோத திராவிட தீயசக்தி! இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment