தமிழகத்தை அனைத்து மட்டங்களிலும் சுரண்டி சிதைத்துக் கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் (அக்டோபர் 24) நடந்த ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பிரச்சாரத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
நீங்கள் எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும். கூட்டத்தோடு கூட்டமாக போகும்போதே கிட்னியை கழற்றி விடுகிறார்கள். இதுதான் திமுக ஆட்சியில் நடைபெறக்கூடிய மோசமான சூழ்நிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்த ஊரில்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் இருக்கிறார். ஆனால் போக்குவரத்துத்துறை அமைச்சரின் ஊரிலேயே இரண்டு, மூன்று மணி வரைக்கும் பேருந்துகள் இல்லை என்று தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். நமது முதலமைச்சரின் ஊர் எது என்று கேட்டால் டெல்டாக்காரன் என்று சொல்வார்.
12 லட்சம் ஹெக்டேர் விலை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழைநீரில் நனைந்து இன்றைக்கு வீணாப்போய்விட்டது. அவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலைக்கு போய்க்கிட்டு இருக்கிறது என்றால் இதற்கு காரணம் திமுக அரசுதான்.
இன்றைக்கு மக்காச்சோளம் மாவுக்கு செஸ் வரி போட்டது இந்த திமுக அரசு. ஆட்சிக்கு வந்த உடனேயே எல்லா குடும்ப பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்னார்கள். முதலில் வந்த உடனே கொடுத்தார்களா? நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை இரண்டு ஆண்டுகளாக கொடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தகுதியுடைய பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், விடுப்பட்ட பெண்களுக்கு நாங்கள் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், செல்வப்பெருந்தகை பார்த்து நான் கேட்கிறேன். சமூகநீதி எங்கே இருக்கிறது. உங்களால் பதில் சொல்ல முடியுமா? வேங்கை வயல் பிரச்சனை என்ன ஆட்சு.
இதனை திருமாவளவனால் சொல்ல முடியுமா? அது மட்டுமில்லை செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை அழைக்கவில்லை. அதற்கு செல்வப்பெருந்தகை எங்களை ஏன் நீர் திறப்பின்போது தாழ்த்தப்பட்ட சமூகம் என்று எங்களை அழைக்காமல் ஒடுக்க பார்க்கிறீர்களா என்று கேட்கிறார். இதைதான் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக நீதி திமுகவில் இருக்கிறதா? கிடையாது. பிறகு ஏன் அந்த கூட்டணியில் இருக்கிறீர்கள். வெளியே வரவேண்டியது தானே.
தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார்கள் தெரியுமா? காவிரியும், குண்டாற்றையும் இணைப்போம் என்று சொன்னார்கள். இதுவரையிலும் இணைத்திருத்திருக்கிறார்களா? இல்லவே இல்லை.
மருதையாற்றின் குறுக்கே பாலம் அமைப்போம் என்று சொன்னார்கள். அமைத்தார்களா இல்லவே இல்லை. மருதையாற்றில் ஏற்கனவே சாக்கடை, கழிவுநீர் எல்லாம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை சுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள் இதுவரையில் செய்யவில்லை.
மருதையாற்றில் 150 கோடி ரூபாய்க்கு பாலம் அமைத்துக்கொடுத்தது மத்திய அரசு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரம்பலூரில் இருந்து சென்னை, அரியலூரில் இருந்து சென்னை, திருச்சி, கும்பகோணம் என்று 3500 கோடி ரூபாய்க்கு சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கியது.
பினராய் விஜயன் எதிர்ப்பா இருந்தால் கூட கேரள மாநில மக்கள் நலன் கருதி 10 ஆயிரம் கோடி ரூபாயில் விழிஞ்சத்திலேயே மிகப்பெரிய துறைமுகத்தை கேட்டு வாங்கியிருக்கிறார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேருங்கள் என்று மத்திய அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நமது முதலமைச்சர் இந்த திட்டத்தில் சேரமாட்டோம் என்று சொல்கிறார்.
இப்பகுதி மக்கள் ரயில்விட வில்லை என்ற நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் அமைத்து ரயில்கள் நிச்சயமாக விடப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைகின்றது உறுதி. அண்ணன் இபிஎஸ் அவர்கள் முதலமைச்சராவது உறுதி. இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர் கால அதிகார ஆட்சியில் ஹைதர் அலியையும், திப்பு சுல்தானையும் தவிர்த்து விட முடியாது இந்த பெரம்பலூரின் வரலாற்றை பின் நோக்கி பார்க்கும் போது.
அதே நேரத்தில் இசை உலகில் தனக்கென ஒரு தனிச்சிறப்பான இடத்தினை பிடித்திருந்த நாதஸ்வர கலைஞர் பெரம்பலூர் அங்கப்பபிள்ளையையும் மறந்து விட முடியாது. நரகாசுர வதம் முடிந்து மகாவிஷ்ணு உலகிற்கு சொன்ன கருத்து தீமைகள் விலகி, நன்மைகள் சேர்ந்தது என. இருள் நீங்கி, ஒளி பிறந்ததை உணர்த்தவே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீய ஆட்சியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் மக்கள் இருளிலும், தீமைகளும் சூழவே வாழ்ந்து வருகின்றனர்.
மகாவிஷ்ணு சொன்ன கருத்தினை இந்த யுகத்தில் உலகிற்கே எடுத்துச் சொல்லி வருகிறார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள். அவர்களின் வழியிலே தமிழக மக்களைச் சூழ்ந்துள்ள இருள் மறையப் போகிறது, 2026 மாற்றம் நிகழப்போகிறது, மகிழ்ச்சி மலரப்போகிறது, அதன் பின்னர் தினம் தினம் தீபாவளி தான் என்பதையும், உண்மையான விடியல் எது என்பதையும் தமிழக மக்களுக்கு உறுதிபடச் சொல்லவே ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’. அதன் ஆறாம் நாள் இன்று பெரம்பலூரில்.
இந்த நிகழ்வில் பாஜக சிறுபாண்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் முத்தமிழ்செல்வன், மற்றும் பாஜகவின் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான இளம்பை தமிழ்ச்செல்வன், அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் அருணாச்சலம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

