கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய விடியா மாடல் அரசைக் கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் (நவம்பர் 06) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் கோவை விமான நிலையம் பின்புறம் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை மூன்று பேர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழக பெண்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து மாநில பாஜக மகளிர் அணி சார்பில் நவம்பர் 6ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.
அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் மாவட்டத் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜக மகளிர் அணி சார்பில் விடியா அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதே போன்று பல்வேறு மாவட்டங்களில் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.

