---Advertisement---

38,000 மெட்ரிக் டன் எரிபொருள் வழங்கி உதவி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி

On: March 30, 2026 9:13 AM
Follow Us:
---Advertisement---

பெட்ரோல், டீசல் என 38,000 மெட்ரிக் டன் எரிபொருள் வழங்கி உதவி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதன் விளைவாக இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை 25 சதவீதம் அந்நாட்டு அரசு உயர்த்தியது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.317-இல் இருந்து ரூ.398-ஆக அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் டீசல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.79 உயர்ந்து ரூ.382-ஆக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.195-இல் இருந்து ரூ.255-ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கு உதவும் விதமாக 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோலை இந்தியா (மார்ச் 28) அனுப்பிவைத்தது. அவசரகால உதவியாக இதை இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) இலங்கை எண்ணெய் நிறுவனத்துக்கு (எல்ஐஓசி) வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அநுர குமார திசாநாயக வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘மத்திய கிழக்கு விவகாரத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த சில நாள்களுக்கு முன் பேசினேன். எனது கோரிக்கைகளைப் பரிசீலித்து, 38,000 மெட்ரிக் டன் எரிபொருளுடன் இந்தியா அனுப்பிய சரக்கு கப்பல் கொழும்பை சனிக்கிழமை வந்தடைந்தது.

அவசரகாலத்தில் இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்ருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment