---Advertisement---

அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

On: February 1, 2025 6:59 PM
Follow Us:
---Advertisement---

மத்திய பட்ஜெட் அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க வகையில் இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: மத்திய பட்ஜெட் அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட். இந்த பட்ஜெட் மக்களின் சேமிப்பையும், முதலீட்டையும், நுகர்வையும் அதிகரிக்கும். நிதியமைச்சர் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கு வாழ்த்துகள். இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட். இளைஞர்களுக்காக பல துறைகளில் முன்னேறி வருகின்றனர்.

இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அணுசக்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பது வரலாற்று சிறப்புமிக்கது. இது நாட்டின் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பை உறுதி செய்யும். பட்ஜெட் மக்களின் பாக்கெட்டுகளை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், சீர்திருத்தங்களை நோக்கி முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment