தமிழகம் முழுவதும் திமுக மீது எதிர்ப்பலை அதிகரித்து வருவது தென்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு குறைபாடு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் தேர்தல் நெருங்கிய நிலையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக மக்கள் உணர்ந்து வருகின்றனர். இதனால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை பகிர்ந்து கொள்வதும் களத்தில் வெளிப்படுகிறது.
பல இடங்களில் வேட்பாளர்களுடன் வாக்குவாதங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 40-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ள கூட்டணிக்குள்ளேயே உள்ளக முரண்பாடுகள் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், பொதுமக்கள் தைரியமாகச் சுதந்திரமாகச் செல்வதற்கே சிரமமான சூழல் நிலவுவதாக கருத்துகள் எழுகின்றன. விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, மக்களிடையே நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலைமையால் திமுகவினர் கவலைக்குள்ளாகியுள்ளனர்.




