தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜயின் அரசியல் நகர்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் வேட்பாளராக களமிறங்கிய போது, தனது பெயரை “ஜோசப் விஜய்” என குறிப்பிட்டது கவனம் பெற்றது. இது கிறிஸ்தவ சிறுபான்மை வாக்குகளை கவரும் அரசியல் முயற்சியாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கட்சி தொடங்கியதிலிருந்து “நடிகர் விஜய்” என அறிக்கைகளில் இடம்பெற்ற நிலையில், தேர்தல் நேரத்தில் பெயர் மாற்றம் மற்றும் பிரச்சார பேச்சு பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனுடன் மாதா கோயிலில் விஜய் சென்றது தொடர்பான தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
தேர்தலுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோவில், ஷீரடி சாய் பாபா கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விஜய் செல்வதும், அவருடன் ஜோதிடர் பயணிப்பதாக வெளியாகிய புகைப்படங்களும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
தேர்தல் சமயத்தில் முழுமையான பிரச்சாரத்தில் ஈடுபடாத விஜய், தற்போது தொடர்ச்சியாக மக்களைச் சந்திப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. “இனி விஜயின் அரசியல் முடிவுகளை ஜோதிடம் தீர்மானிக்குமா, ஆதவ் தீர்மானிப்பாரா, அல்லது புஸ்ஸி ஆனந்தா?” என சமூக வலைத்தள வாசிகள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
மொத்தத்தில், விஜயின் சமீபத்திய பயணங்களும் முன்னுக்குப் பின் முரணான அரசியல் பேச்சுகளும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மோ. வினோத்ராஜா




