கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி கிராமத்திற்கு நேற்று காலை வேனில் வந்த, 20க்கும் மேற்பட்ட மிஷனரி கூட்டம் வீடுகள் தோறும் கிறிஸ்துவ மதம் சார்ந்த துண்டு பிரசுரங்களை வழங்கி, கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் நல்லது நடக்கும் என கூறினர்.
ஆண்கள் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், எந்த அனுமதியும் பெறாமல், கிராமத்திற்குள் வந்து, எவ்வாறு மதம் மாற்ற முயற்சி செய்யலாம் என கேட்டு, அக்கிராம பெண்கள் அந்த கிறிஸ்துவ மிஷனரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அவர்கள் வேனில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். வேனை கிராம மக்கள் சுற்றி வளைத்தனர்.
பிரச்னை பெரிதாகவே, கெலமங்கலம் போலீசார் வந்து, 20க்கும் மேற்பட்டோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதையடுத்து, இதுபோல மீண்டும் நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
அதேபோல, தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை, மஞ்சுமலை, மஞ்சுகொண்டப்பள்ளி, அந்தேவனப்பள்ளி, நூருந்துசாமி மலை உட்பட பல்வேறு கிராமத்திலும், வாகனத்தில் வந்த 50க்கும் மேற்பட்ட கிறிஸ்து மிஷனரிகள் வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை வழங்கி, மத மாற்றம் செய்ய முயன்றனர். அவர்களை தேன்கனிக்கோட்டை போலீசாரிடம், கிராம மக்கள் பிடித்து கொடுத்தனர்.




