மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.
உத்தரபிரதேச மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். அவர் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து கோவிலில் நடந்த யாகத்தில் பிரதமர் பங்கேற்றார்.
இன்று (ஏப்ரல் 29) 594 கிலோ மீட்டர் நீளமுள்ள கங்கா விரைவுச்சாலையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.




