---Advertisement---

சிக்கிம் மாநில சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய பிரதமர் மோடி

On: April 28, 2026 11:45 AM
Follow Us:
---Advertisement---

சிக்கிம் மாநிலத்துக்கு இருநாள் அரசுமுறை பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிறுவர்களுடன் கால்பந்து விளையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறை பயணமாக சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள சிறுவர்களுடன் கால்பந்து விளையாடும் புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

அதில், “சிக்கிம் கேங்டாக்கில் ஒரு அருமையான காலைப்பொழுதில் என் இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதைப் போன்று வேறெதுவும் இல்லை” என்றும், மற்றொரு பதிவில், “சிறுவர்களுடன் ஒரு உற்சாகமூட்டும் கால்பந்து ஆட்டம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அதில், ரூ. 4,000 கோடிக்கும் மேலான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஆர்கிட் மலர்கள் வளர்க்கப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆர்கிட் பூங்காவான கேங்டாக் பகுதியில் உள்ள ஸ்வர்ணஜெயந்தி மைத்ரி மஞ்சரி பூங்காவைப் பார்வையிடவுள்ளார். இதனால், சிக்கிம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment