தேன்கனிக்கோட்டை அருகே 17 வயது ஹிந்து சிறுமியை கடத்தி சென்ற இஸ்லாமிய ஜிகாதி வாலிபரை கைது செய்யாமல், போலீசார் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ‘லவ் ஜிகாத்’ நடக்கும் முன் மகளை மீட்டு தரக்கோரி, சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் 17 வயது மகள் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளார். இவரை தேன்கனிக் கோட்டை அடுத்த உள்ளுகுறுக்கையை சேர்ந்த அப்துல்லா 27, கடந்த, 20ம் தேதி மாலை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட இஸ்லாமிய வாலிபர் மீது வழக்கு பதியாமல் சிறுமி மாயமானதாக மட்டும் போலீசார் வழக்கு பதிந்துள்ளதாக, சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மகளை கடத்தி சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி (ஏப்ரல் 27) மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்த அவர்கள், கண்ணீர் விட்டு கதறினர்.
சிறுமியின் தந்தை கூறியதாவது: ஹிந்து மதத்தை சேர்ந்த என் மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. ஏப்ரல் 20ம் தேதி, நானும், என் மனைவியும் விவசாய பணிக்கு சென்றிருந்தோம். உள் ளுகுறுக்கையை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அப்துல்லா 27, அன்று மாலை, 5:30 மணியளவில் வீட்டிலிருந்த என் மகளை காரில் கடத்தி சென்றுள்ளார்.
நான் அன்றிரவே ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி காவல் நிலையங்களுக்கு சென்றேன். அவர்கள், தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு செல்லும்படி கூறினர். அங்கும் புகாரளித்தேன். தெரிந்தவர்கள் வீட்டில், உங்கள் மகள் உள்ளாரா என விசாரித்து விட்டு நாளை வாருங்கள் எனக்கூறி அனுப்பினர்.
கடந்த, 21ல் மீண்டும் புகாரளித்தேன். பணியிலிருந்த எஸ்.ஐ., காந்திமதி தேர்தல் பணியை பார்ப்பதா; உங்கள் வேலையை பார்ப்பதா? தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என, மிக அலட்சியாக பதில் கூறினார். தற்போது ஓட்டு எண்ணிக்கை முடியட்டும் என கூறுகிறார்.
கிருஷ்ணகிரி, ஏ.டி.எஸ்.பி., வேலுமணியிடம் முறையிட்டேன். அவர் தேன்கனிக்கோட்டை மகளிர் இன்ஸ்பெக்டரிடம் பேசி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். என் மகளை கடத்திய அப்துல்லா மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறுகின்றனர்.
மகளை கடத்தி சென்றவர், எங்காவது மகளை விற்று விட்டு சென்றாலோ அல்லது மதம் மாற்றம் செய்து, திருமணம் செய்து கொண்டாலோ என்ன செய்வது? உடனடியாக அப்துல்லாவை கைது செய்து, மகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த, 2025 நவம்பரில் கிருஷ்ணகிரியில் 17 வயது சிறுமியை கடத்தி ‘லவ் ஜிகாத்’ என, மதமாற்றம் செய்து திருமணம் செய்த, அப்துல் கைப் 21, அவரது தந்தை அப்துல் கபார், 56, தாய் நசீமா, 46, ஆகியோரை ‘போக்சோ’ வழக்கில், கிருஷ்ணகிரி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டை சிறுமிக்கும், ‘லவ் ஜிகாத்’ நடந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் சிறுமியின் பெற்றோர் கதறி துடிக்கின்றனர். ஆனால் போலீசார் தேர்தலை காரணம் காட்டி அலட்சியமாக இருப்பது பெற்றோர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சிறுமியை கடத்திய ஜிகாதியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.




