---Advertisement---

ஒரே திட்டத்தால் நக்சல் கூடாரத்தை தகர்த்த மோடி அரசு!

On: February 9, 2026 4:07 PM
Follow Us:
---Advertisement---

50 ஆண்டுகளுக்கு மேலாக நக்சலின் கூடாரமாக இருந்து வந்த ஒடிசா மாநிலத்திலுள்ள மல்காங்கிரி மாவட்டம், இரண்டு நாட்களுக்கு முன்பு ‘Naxal-free’ மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இறுதியாக பதுங்கியிருந்த மாவோயிஸ்டின் கங்கேர்கடி பகுதி கமிட்டி கமாண்டர் சுக்ராம் மர்கம் அம்மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, மத்திய அரசின் நக்சல் ஒழிப்பு முன்னெடுப்பு இமாலய வெற்றியை அடைந்தது.

இம்மாவட்டம், ஆந்திரா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தின் எல்லையில் உள்ளதால், நக்சல்களுக்கு பல ஆண்டுகளாக சாதமாக இருந்து வந்தது. இம்மாவட்டத்தில் ஸ்வபிமன் அன்சல் பகுதி, பல்லிமேலா நீர்தேகத்தில் 65 கிமீ நீர் வழங்கும் திட்டத்தினால் மற்ற பகுதிகளுடனான தொடர்பு துண்டிப்பானது, இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நக்சல்கள் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அதை நக்சல் கூடாரமாக மாற்றி, வளர்ச்சியை தடுத்து வந்தனர்.

குறிப்பாக, 2008-2011 காலக்கட்டத்தில் அப்பகுதி அரசு அதிகாரி, பாதுகாப்பு படையினருக்கே சவால் நிறைந்ததாக இருந்துவந்தது. 2008-ஆம் ஆண்டு பலிமேலா நீர்த்தேக்கம் அருகே நக்சல்கள் 39 பாதுகாப்பு படையினரை சுட்டு கொன்றனர். சில வருடம் கழித்து 2011ல், அங்கு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜூனியர் பொறியாளரை கடத்தி எட்டு நாட்கள் தங்கள் பிடியில் வைத்து, நக்சல் கமாண்டர் தலைவருக்கு பெயில் கொடுத்த பின் அவர்களை விடுவித்தனர். அதுமட்டுமல்லாமல், மாவோயிஸ்ட்களில் அச்சுறுத்தலால், மாநில தேர்தல் ஆணையம் 18 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 ஜில்லா பகுதிகளில் தேர்தலை ஒத்திவைத்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2015ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு படையினரை களத்தில் இறங்கி, 910-மீட்டர் நீளம் கொண்ட பாலத்தை குருபிரியா ஆற்றிக்கிடையே 2018-ல் கட்டி முடித்தது, இதற்கு 49 ஆண்டுகளாக செய்த மொத்த செலவு ₹172 கோடி என தெரியவந்துள்ளது. இதனால் 170 கிராமங்களை மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின் அசுர வேகத்தில் அங்குள்ள கிராமங்களில் எக்காலத்திற்கும் ஏதுவாக சாலை அமைக்கும் பணி முடிந்து, நக்சல்களை ஒழிக்க இராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின் தொடர்ந்து நக்சல்களுக்கு எதிராக அரு முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர் வெற்றியை சந்தித்து இப்போது ‘Naxal-free’ மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment