---Advertisement---

‘குப்பை நகரம்’ சென்னை

On: January 30, 2026 7:02 PM
Follow Us:
---Advertisement---

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பில் (ஸ்வச் சா்வேக்ஷான்), தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு 38வது இடம் கிடைத்தது, இதற்கு முக்கியக் காரணம் தினசரி குப்பைகளை கையாள்வது, வீட்டுக்கு வீடு சென்று குப்பை வாங்குவதில் தோல்வி, பொது இடங்களில் சேரும் குப்பைகள், குப்பைகிடங்கு மறுசீரமைப்பில் தோல்வி என பல காரணங்கள் உள்ளன.

தற்போது தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னை மாநகராட்சி துவங்கிய ‘குப்பையில்லா நகரம்’ முழுவதுமாக சிதைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சேரும் 6,150 டன் குப்பைகளில் வெறும் 10% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது, மீதமுள்ளவை அனைத்தும் குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டு வருகின்றன.

செயலுக்கு வராத திட்டங்கள்

இதற்கு முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்ததில், சென்னையிலுள்ள 250 ‘உரமாக்கும்’ மையங்களில், 196-க்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில் ஒன்று, பெரம்பூரில் உள்ள மேயர் பிரியாவின் அலுவலகத்தின் அருகிலுள்ளது, அது தற்போது வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியின் பல திட்டங்கள், இன்றுவரை செயல்பாட்டிற்கு வராமல் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றது. மிகமுக்கியமாக, 500 டன் கொள்திறன் கொண்ட ஐந்து ‘Bio-CNG’ ஆலைகளை கோயம்பேடு, சோழிங்கநல்லூர், பெருங்குடியில் அமைக்கப்படும் என்பது இதுவரை எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் உள்ளன. அத்துடன், கொடுங்கையூரில் குப்பைகிடங்கில் 500 டன் கொள்திறன் கொண்ட ‘குவியல் முறை உரம் தயாரித்தல்’ மற்றும் ‘பயோ-CNG’ ஆலை நிறுவுதல் திட்டத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மூன்றாண்டுகளாக அப்படியே கிடக்கின்றது. இதனால் நாளொன்றுக்கு சேரும் குப்பைகள், குறைந்தது 2,700 டன் நேரடியாக குப்பைக் கிடங்குக்கு செல்கிறது.

இதில் குறிப்பிட வேண்டியது, சென்னை மாநகராட்சியின் குப்பை கையாள்வதில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு. ஒரு ஆண்டிற்கு ₹500 கோடி செலவு செய்து, இதுவரை 13 மண்டலங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை இம்முடிவால் எந்தப் பயனும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரியவருகிறது.

குப்பையால் ஏற்படும் பாதிப்புகள்

தொடர்ந்து, குப்பைகளை கையாளாமல் கிடங்கில் கொட்டுவது, மண் வளத்தை அழித்துவிடும், அத்துடன் பூமியிலுள்ள நீரும் நச்சுக்கலந்து மாசடையும் என்று தெரிந்ததே. இதன் தொடர்ச்சியாக, காற்று மாசு, மக்களுக்கு சுவாசிப்பு பிரச்சனை, கொசு உற்பத்தியாவது, மேலும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுதல் போன்ற பல பிரச்சினைகள் உருவாகும்.

திமுக அரசின் பல வெற்று அறிவிப்புகளில் இதுவும் ஒன்று என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால், இதில் அலட்சியமாக இருப்பது வருங்காலத்தில் பெரும் அபாயம்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment